மீகொட கொவிட் தடுப்பூசி நிலையத்திற்கு சென்று தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளான நபரும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரும் இவ்வாறு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திய தாதி உட்பட ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மீகொட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த கொவிட் தொற்றாளர் பானலு சம்பத் மாவத்தை பிரதேசத்தை வர்த்தகர் என குறிப்பிடப்படுகின்றது. அவர் கடந்த ஜுலை மாதம் 02ஆம் திகதி கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது தடுப்பூசி பெற வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.