உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் சுமார் 1,000 மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் ஏராளமான மாணவர்களிடமிருந்து ஃபைசர் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் கோரிக்கைகள் வந்தன.
சில நாடுகள் ஃபைசர் தடுப்பூசிகளை வழங்காமல் தமது நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்பதே இதற்கான காரணம்.
இதன் காரணமாக, சுமார் 987 மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சுமார் 2,100 மாணவர்களும் வெளிநாடுகளில் கல்வி கற்ற செல்வதற்கு முன்னர் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள்.
மேலும் மேல் மாகாணத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.