ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தாக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்து இந்த பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது ஆடைகளை கிழத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள். இதுவா சட்டம்? இதுவா நீதி? நியாயத்திற்காக போராடினால் இப்படியா செய்வார்கள்?
நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என நீதிமன்றம் கூறியது. எனினும் பேருந்து ஒன்றில் எங்களை கடத்தி செல்வது போன்று கொண்டு செல்கின்றார்கள். எங்கு கொண்டு செல்கின்றார்கள் என தெரியவில்லை. இது எங்கு சென்று முடியப்போகின்றதென எங்களுக்கு தெரியவில்லை.
ஆடைகளை கிழத்தார்கள். அமைச்சர் சரத் வீரசேகர எனக்கு ஆடை கொண்டு வந்து தாருங்கள்” என அவர் தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.