மருத்துவர்கள் உங்களுக்கு இந்த பிரச்னைகள் இருந்தாலும் அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும் என்கின்றனர்.
அப்படி 5 பிரச்னைகளை முன் வைக்கின்றனர். அவை என்னென்ன தெரிந்துகொள்ளுங்கள்.
நீரிழிவு நோய்
உங்கள் உடலில் உள்ள செல்கள் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக மாறும்போது, இரத்தத்தில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை அகற்ற சிறுநீரகம கடினமாக உழைக்கும். அந்த சமயத்தில் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும். எனவேதான் நீரிழிவு நோயின் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழித்தல் , தண்ணீர் குடித்தல் போன்றவை இருக்கும்.
இரத்த சோகை
இரத்த சோகை என்பது உங்கள் உடலில் ஹீமோகுளோபினை உருவாக்கும் சிவப்பு இரத்த அணுக்கள் குறைவாக இருக்கும் போது உண்டாகும் அறிகுறியாகும். மோசமான உணவு அல்லது அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களால் இது ஏற்படலாம். நீரிழப்பு என்பது இரத்த சோகையின் பொதுவான அறிகுறியாகும். உங்களுக்கு கடுமையான இரத்த சோகை இருக்கும்போது அறிகுறிகளும் தீவிரமாக இருக்கும். இந்த நிலையின் பிற அறிகுறிகளாக தலைச்சுற்றல், சோர்வு, வியர்வை போன்ற பிரச்சனைகளை உள்ளடக்கியுள்ளது.
ஹைபர்கால்சீமியா
ஹைபர்கால்சீமியா என்பது உடலில் கால்சியத்தின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் போது உண்டாகக் கூடிய அறிகுறியாகும். அதிகப்படியான பாராதைராய்டு சுரப்பிகள், காசநோய் மற்றும் புற்றுநோய் காரணமாக இது நிகழலாம். தாகமாக இருப்பது ஹைபர்கால்சீமியாவின் முதல் அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் அதிக அளவு கால்சியம் இருப்பது எலும்புகளை பலவீனப்படுத்தி சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும்.
வாய் வறட்சி
வாயில் உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான உமிழ்நீரை உருவாக்காதபோது, அதிக தாகத்தை உணரக்கூடும். புற்றுநோய்க்கான மருந்துகள் அல்லது மற்ற ஏதேனும் நோய்க்கான மாத்திரை, மருந்துகள், சிகிச்சைகள் அல்லது புகையிலை பயன்பாடு போன்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் தாகம் எடுக்கலாம். வறண்ட வாயின் மற்ற அறிகுறிகளில் துர்நாற்றம், சுவை மாற்றம், ஈறுகளில் எரிச்சல் மற்றும் மென்று சாப்பிடுவதில் சிக்கல் ஆகியவையும் இருக்கலாம்.
கர்ப்பமாக இருத்தல்
கர்ப்பத்தில் பல அறிகுறிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த தண்ணீர் தாகம். முதல் மூன்று மாதங்களில், இரத்தத்தின் அளவு அதிகரிக்க, சிறுநீரகங்களை அதிகப்படியான திரவத்தை உருவாக்க தூண்டுகிறது. அந்த சமயத்தில்தான் உடலில் இருந்து வரும் நீர் இழப்பு உங்களுக்கு தாகத்தை உண்டாக்குகிறது. இது நீர் இழப்பின் அளவை ஈடுகட்ட வேண்டும் என்பதற்காக உடல் தரும் அறிகுறியாகும்.