இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த சில கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் திருமணங்களில் கலந்து கொள்ளவும், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
ஜூலை 05ம் திகதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, திருமணங்களுக்கு அனுமதி இல்லை. மணமகனும், மணமகளும் உட்பட 10 பேர் மாத்திரமே பதிவுத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்,
ஏற்கனவே, 5 – 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.