‘‘டைரக்டர் லிங்குசாமி ஒரு புதிய தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அந்த படத்தின் கதை, ‘பகலவன்’ என்ற பெயரில் நான் எழுதிய கதை. அதைத்தான் அவர் தெலுங்கில் படமாக்க இருக்கிறார். அந்த கதையை படமாக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று சீமான் தனது புகாரில் கூறியிருக்கிறார்.
‘‘நான் இயக்க இருக்கும் படத்தின் கதை, என் சொந்த கற்பனையில் உருவானது. மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து திரைக்கதையை தயார் செய்து இருக்கிறேன்’’ என்று லிங்குசாமி விளக்கம் அளித்து இருக்கிறார்.
2 பேர்களிடமும் விசாரணை நடத்திய திரைப்பட சங்கங்கள், ‘‘ஒரே கரு 2 பேர் சிந்தனையிலும் உதிக்க வாய்ப்பு இருக்கிறது. தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை’’ என்று கையை விரித்து விட்டன.