பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசினார்.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார்.
விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.