சன் தொலைக்காட்சியில் தற்போது TRPயில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் ரோஜா.
விறுவிறுப்பான கதைக்களத்தில் நகர்ந்து வரும் ரோஜா சீரியலில் யாரும் எதிர்பாராத திருப்பம் நடந்துள்ளது.
ஆம், இன்று வெளியான ப்ரோமோவில், ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது என்று கூட கூறலாம்.
அதாவது, அனுவிடம் இருந்த முக்கியமான ஒரு பொருளை வாங்க ரோஜா போராடுகிறார்.
அப்போது ரோஜாவுக்கும், அணுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அணு மாடியில் இருந்து கீழே தவறி விழுகிறார்.
உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம், ரோஜா என்று கருதிய டைகர் மாணிக்கம், புகார் அளித்து, ரோஜாவை கைது செய்யவைத்துள்ளார்.
பரபரப்பான இந்த வார எபிசோட்களில், இனி எத்தனை திருப்புமுனைகள் வரவிருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்