கொய்யா மரத்தின் இலை, காய், கனி இப்படி எல்லா பாகங்களும் பயன்படக் கூடியது.
அந்தவகையில் கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது என்கிறது ஆராய்ச்சி. செரிமான பிரச்சனையில் இருந்து விந்தணுக்கள் உற்பத்தி வரை சரி செய்யும் கொய்யா இலை டீ.
கொய்யா இலை எனும் அற்புதம்
எல்லாருக்கும் கொய்யா காய் என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளிக் காலங்களில் இதை அழகாக வெட்டி உப்பு காரத்துடன் தொட்டு சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இது சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் தலை சிறந்தது. ரொம்ப சீப்பாக எப்போதும் கிடைக்கும் பழம் என்றால் அது கொய்யாப்பழம் தான்.
ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கொய்யா மரத்தின் இலை, காய், கனி பட்டை இப்படி எல்லாமே நமக்கு பயன்படக் கூடியது. வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்த்தாலே போதும் உங்க பிணிகளை ஓட்டி விட முடியும். கொய்யா இலையில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. காய்களை மட்டும் பறித்து விட்டு இலைகளை பயன்படுத்தாதவர்கள் தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த கொய்யா இலையில் டீ போட்டு குடித்தாலே நீங்கள் சகல நன்மைகளையும் பெற முடியும்.
விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க
நிறைய ஆண்களுக்கு போதுமான விந்தணுக்கள் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். இதனால் கருத்தரிப்பு தள்ளிப் போட்டுக் கொண்டே வரும்
. ஆண்கள் தங்கள் விந்தணுக்கள் உற்பத்தியை பெருக்க கொய்யா இலைகளை டீ போட்டு குடிக்கலாம்.
இது விந்தணு உற்பத்தியை பெருக்கி சீக்கிரமே கருத்தரிக்க உதவுகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது, விந்து உயிரணுக்கள் வலிமை இல்லாமல் இருந்தாலும் இந்த கொய்யா இலைகளை டீ போட்டு தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் குடித்து வருவது நல்லது. உடல் பதட்டம் இல்லாமல் இருக்கின்ற வேளையில், உயிரணுக்கள் உற்பத்தி சீராகத் தூண்டப்படுவதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்கும்.
விந்து உயிரணுக்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரிக்கவும் வலிமையாகவுமு் தொடங்கும்.
கொய்யா இலை டீ தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
கொய்யா இலை :5
தண்ணீர்-தேவைக்கேற்ப
தேயிலை தூள் சிறுதளவு
கருப்பட்டி
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்பிறகு அதில் சிறுது தேயிலை தூள், கொய்யா இலைகளை போட்டு மறுபடியும் கொதிக்க விடவும்.
கொய்யா இலை சாறு நன்றாக இறங்க வேண்டும். பிறகு அதில் கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வாருங்கள். ஆரோக்கியமான கொய்யா இலை டீ ரெடி.