இலங்கை இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை காலியைச் சேர்ந்த 30 வயதுடைய Kushan Niroshana என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Kushan Niroshana விக்டோரியா மாநிலம் Ballarat பகுதியில் பொறியியலாளராக பணிபுரிந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் Ballarat-இலிருந்து Colac-க்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் , அவரது கார் பிராதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அவசர சேவைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டபோதும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பே அவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Kushan Niroshana அனைவருடனும் நட்புடன் பழகுபவர் என்பதுடன் உதவும் மனப்பான்மை உள்ளவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த Kushan Niroshana இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.