வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளரான காசிலிங்கம் கீதநாத் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரால் முன்மொழியப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கான விசேட அதிகாரியான இவர் இன்றைய தினம் மேற்கொண்ட குறித்த விஜயத்தின் போது வீட்டுத்திட்ட முறைகேடுகள் தொடர்பில் மக்களிடம் விசாரித்து அறிந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஜயம் தொடர்பில் பிரதமரின் விசேட பிரதிநிதி காசிலிங்கம் கீதநாத்தின் டுவிட்டர் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவில், எப்பொழுதும் மக்களிடம் பேசி அவர்கள் எதிர்நோக்கும் குறைகள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம்.
Field visits in #Jaffna today.
Always look fwd to speaking to the ppl & discuss their grievances.
The Govt. is working to resettle the remaining war affected families by providing them lands & houses. This is being done under a points system drawn up by the Resettlement Ministry pic.twitter.com/zZjnrsL86P— G. Cassilingham (@CassilingamG) July 12, 2021