கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பனவற்றை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சையும், 4ஆம் திகதி தொடக்கம் உயர்தரப் பரீட்சையும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கோவிட் காரணமாக கற்பிக்கப்படாத பாடங்களை கற்பிப்பதற்கு வாய்ப்பு அளித்து அதன் பின்னர் பரீட்சை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
இணைய வழி கல்வி என்பது குறித்த போதியளவு தெளிவு இதுவரையில் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.