800 திரைப்படம் நிச்சயமாக வெளிவரும் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்லா சந்தர்ப்பங்களிலும் தாம் தாய்நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இந்த நாட்டின் அனைத்து மக்களும் தமக்கு பேராதரவு வழங்கியதாகவும், தனது அறக்கட்டளை ஊடாகவும் வேறு வழிகளிலும் தற்பொழுது அந்த மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக திரைப்படத்தின் பணிகள் ஸ்தம்பித்திருப்பதாகவும் பெருந்தொற்று நிலைமை நீங்கியதும் நிச்சயமாக படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்திலிருந்து விலகுமாறு தாம் விஜய் சேதுபதிக்கு தாம் கூறியதாகவும் ஏனென்றால் அவருக்கு அழுத்தங்கள் அதிகரிக்கவும் அவ்வாறு அறிவுறுத்தியதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் என்னைப் பற்றி இரண்டு விதமான நிலைப்பாடுகள் காணப்படுகின்ற என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு தரப்பினர் தாம் சிங்களவர் எனவும் தாம் சிங்களம் மட்டுமே பேசுவதாகவும், தமிழ் தெரியாது எனவும் கருதுகின்றனர் மற்றுமொரு தரப்பினர் வேறு விதமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் அடிக்கடி ஊடகங்களில் பேசுவதில்லை தம்மை பற்றி தெரியாதவர்கள் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.
800 திரைப்படத்தின் பிரதான பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்காக பிரபல திரை நட்சத்திரம் ஒருவரை ஒப்பந்தம் செய்ய முடியாது எனவும் அவ்வாறு செய்தால் மீளவும் எதிர்ப்புகள் கிளம்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவிலிருந்து ஓர் நடிகரை இந்த திரைப்படத்தில் நடிக்கச் செய்ய உள்ளதாகவும், இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காக நடிகையை இலங்கையில் தெரிவு செய்யுமாறு தாம் படத்தின் இயக்குனரிடம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிக்கக் கூடிய ஆர்வம் உடையவர்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக முயற்சி செய்யலாம் எனவும் இது ஏழு மொழிகளில் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட உள்ளதாகவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் நிலைமைகளின் பின்னர் நிச்சயமாக தமது சுயசரிதையை கருவாகக் கொண்ட 800 திரைப்படம் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.