நாட்டில் பசு வதையை முழுமையாக தடை செய்வதற்கான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலம் அடுத்துவரும் சில வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பௌத்த சாசன அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர், சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதையடுத்து, ஏழு நாட்களின் பின்னர் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும்.
இதற்கமைவான, எண்ணக்கரு பத்திரத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.