கொழும்பில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 50 லட்சம் பெறுமதியான அழகு கலை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பெறுமதியான அழகு கலை பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை நுகர்வோர் விவகார ஆணையத்தினால் நேற்று பிற்பகல் இந்த அழகு கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல் மாகாண புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய தகவலுக்கமைய கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள களஞ்சிய அறையிலேயே இந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது..
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களின் பைகளில் மறைத்து இந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் அதில் இருந்த திகதி அடையாளங்களும் மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அழகு கலை பொருட்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் பிரயோகிப்பதாக தகவல் வெளியாகியு்ளது.