தனது பதவிக்காலத்தின் இரண்டு வருடங்கள் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தனது அரசியல் பயணத்தை கைவிட்டுள்ளார். இதனால் தற்போதைய அரசாங்கம் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேடுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.
உலகில்வேறு எங்கும் தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் எந்த ஜனாதிபதியும் அரசியல் பயணத்தினை கைவிட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திய ஜனநாயகத்தை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் அழித்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பௌத்தத்தை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் நியாயமான கரிசனைகளை வெளியிடும் பௌத்தமதகுருமார்களை தொழிற்சங்கவாதிகளை தாக்குகின்றது.
இதன் காரணமாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் என நளின்பண்டார தெரிவித்துள்ளார்