கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு பகுதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பொலிஸ் பிரிவின் மாமாங்கம் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 50,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.