இலங்கையில் 240 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் முழு திறனையும் பயன்படுத்தினால் இலங்கை அதன் வெளிநாட்டு கடன் நிலைத்தன்மை தொடர்பான பிரச்சினையை நன்கு கையாள முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் வெளிநாட்டு கடன் தொகை சுமார் 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள். ஆனால், இலங்கையிடம் 240 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
இந்தநிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் முன்னேற்றத்திற்கு உதவும் புதிய சட்டம், அடுத்த திங்கட்கிழமை அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



















