பசில் ராஜபக்ச தனது தனிப்பட்ட விடயத்திற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் அமைப்புக்கள் அவரை சந்தித்துள்ளதாக ஊர்ஜிதமான தகவல் கிடைத்துள்ளதாக கனடாவில் இருக்கக்கூடிய மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், அரசுக்கெதிராக பல்வேறுபட்ட வழக்குகளை சர்வதேச ரீதியில் தொடுத்துக் கொண்டிருக்கக்கூடியவருமான ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.
அதாவது , ரணில்,மைத்திரி போன்ற நல்லாட்சி அரசாங்கத்தினருடன் சில பேச்சு வார்த்தைகளை மேற்கொண்ட தமிழ் அமைப்புக்களே இவ்வாறு பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டமைப்பினர் இணைந்து ஒரு அமைச்சு பதவியினை பெற்றுக்கொள்வதே இதற்கான நோக்கமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.