மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்காணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 100க்கும் அதிகமாக உள்ளது. பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்கு ஜேர்மன் மாவட்டமான அக்விலரில் 1,300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நிலையில் ஜேர்மனியில் சுமார் 15,000 பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான வெள்ளப்பெருக்கிற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், பருவநிலை மாற்றத்தால் வளிமண்டலம் சூடாகி மிக கனமழை பெய்வதுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ஜூலை 20 ஆம் தேதியன்று தேசிய துக்க நாளை பிரகடனம் செய்துள்ளார் பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ. பல கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.