கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் 7 லட்ச திருமண நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இது குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சாதாரண காலங்களில் ஆண்டுக்கு சுமார் 350,000 குழந்தை பிறப்புகள் நிகழ்ந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதுவும் ஒன்றரை வருடங்களாக குறைவடைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தொற்று ஒரு மட்டத்தில் இருந்தாலும் திருமண நிகழ்வு சுகாதார வழிமுறைகளுக்கு கீழ் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் சிறந்த தீர்மானம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.