கொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்த சினிமா படப்பிடிப்புகள் தளர்வுக்கு பின் மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜய்யின் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் படப்பிடிப்புகளும் தொடங்கி உள்ளது.
இந்த 2 படங்களின் படப்பிடிப்புகளும் பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டூடியோவில் நடக்கிறது. இதனால் விஜய்யும், கார்த்தியும் படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. தற்போது விஜய்யும், பூஜா ஹெக்டேவும் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி தந்தை மகனாக இருவேடங்களில் நடிக்கிறார். தந்தை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது விஜய் படப்பிடிப்பு நடக்கும் ஸ்டூடியோவில் வில்லன்களுடன் கார்த்தி மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரம் இதே ஸ்டூடியோவில் சண்டை பயிற்சி எடுத்து கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் என்று 2 நாயகிகள் நடிக்கின்றனர். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.