நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் ரிஷாட் பதியுதீன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார், என்பதுடன் பிணை மனுக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















