2 ஆயிரத்து 250 கர்ப்பிணி தாய்மாருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 கர்ப்பிணி தாய்மார் உயிரிழந்துள்ளனர் எனவும் பணியகம் கூறியுள்ளது.
கோவிட் நோய் அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார பணியகம் கர்ப்பிணி தாய்மாருக்கு அறிவித்துள்ளது.



















