கர்ப்பிணி தாய்மார்களுக்குத் தடுப்பூசி போட்டால் மாத்திரமே பிரசவம் பார்க்க முடியும் என்பது சரியான பதிலா என்பது தொடர்பாகப் பெண்கள் தொடர்பாகக் கரிசனை கொண்டுள்ளோர் தற்போதைய சூழ்நிலையில் சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது.
இலங்கையில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக இலங்கை அரசாங்கத்தாலும் கோவிட் -19 செயலணியாலும் எடுக்கப்படும் தீர்மானங்கள் சரியானதா என்பது தொடர்பாகச் சற்று ஆராய வேண்டியுள்ளது.
இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட இந்த விடயத்தில் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு அல்லது தாய்க்கு ஏதாவது ஒரு ஆபத்து ஏற்படுமாயின் இதற்குப் பொறுப்பு கூறுவது யார்?
இன்றும் பல கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவம் தனியார் அல்லது அரச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் நிலையில் பிரசவத்திற்கு முன்னர் தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பது சரியா?
இந்த நடவடிக்கையானது எவ்விதத்தில் சாத்தியமாகும் என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவுபடுத்த வேண்டும் . காரணம் சர்வதேச நாடுகளில் ஒரு தடுப்பூசி ஏற்றப் போனால் நீ கர்ப்பிணியா? இல்லை குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்யானவளா எனப் பல கேள்விகளுக்கு அப்பால் தான் இந்த தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் எதிர்மறையாக இடம்பெறும் ஒரு சம்பவமாக இந்த விடயம் தற்போது பதிவாகிக் கொண்டிருக்கின்றது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கர்ப்பிணித் தாய்மார்கள் மரணித்த நிலையில் இந்த தடுப்பூசியும் காரணமாக இருக்கலாமா? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
இந்த விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் வைத்தியசாலைகள் சரியான நேர்த்தியான பதிலைக் கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
ஆகவே இந்த தடுப்பூசி மூலம் பாதிக்கப்படப்போவது தாய் அல்லது சிசுவினுடைய உயிர் இவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் யார் பொறுப்பேற்பது? இது தொடர்பில் சரியானதொரு விளக்கத்தினை மாவட்ட கோவிட் செயலணி மட்டக்களப்பு மக்களுக்கு வழங்குமா?