தமிழகத்தில் வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டாமல் குறும்படம் எடுப்பதில் கணவன் ஆர்வம் காட்டியதால் புதுப்பெண் தற்கொலை செய்துள்ளார்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கீர்த்தனா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார். ராமச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் குறும்படம் எடுப்பதிலேயே ஆர்வம் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறாய் என கணவரிடம் சண்டை போட்டுவந்துள்ளார்
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் கீர்த்தனா மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
மேலும் வாழ்க்கையிவ் வெறுப்பு அடைந்த கீர்த்தனா மரச்சாமான்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் செல் ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது,மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை உடனடியாக மீட்டு ராமசந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காதல் கணவரின் செயல்பாடுகளால் வெறுத்துபோன இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.