முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தி ஹட்டனில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று நடத்தபட்டுள்ளது.
தலவாக்கலை – அக்கரப்பத்தனை மேற்கு பகுதியில் வசித்த ஜூட் இஷாலினி என்ற சிறுமி என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
2021 ஜூலை 3ஆம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுமி ஜூலை 15இல் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதி கோரி ஹட்டனில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தின் முன் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்திற்கு நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணியின் தலைவருமான வி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியிருந்தார்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே பிரேத பரிசோதனை அறிக்கையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர.
அத்துடன் கொழும்பு மற்றும் பல பகுதிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தோட்டத்துறை சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.