இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததையடுத்து இலங்கைக்கு அண்மையாகவுள்ள தூத்துக்குடி துறைமுக பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிநவீன நீர்மூழ்கி கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் கடற்படை கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையை ஒட்டி சீனா தனது பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள் குத்தகைக்கு எடுப்பதாகவும் இந்தியா நம்புவதாக தெரியவருகிறது.