ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரிய விஷயம் தான். அப்படி இருக்க இரண்டு மூன்று குழந்தைகளை வளர்ப்பது என்றால் எப்படி இருக்கும்? உங்களுக்கு பிறக்க இருப்பது இரட்டைக்குழந்தை என தெரிய வந்திருந்தால் காத்திருக்கும் சவாலை சமாளிக்கும் வழிகளை நித்தி ஜெய்சந்தர் விளக்குகிறார்.
இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் இரு மடங்கு மற்றும் மும்மடங்கு மகிழ்ச்சியை அளிக்கும் என சொல்லப்படுவது உண்மைதான் என்றாலும், சவால்களும் பல மடங்கு இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும், இந்த நிலையை எதிர்பார்த்தால் முதலில் அமைதியாக யோசியுங்கள். கொஞ்சம் திட்டமிடல் மற்றும் உதவியுடன், இதற்கு நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இது ஒன்றும் அத்தனை மோசமானதல்ல. இரட்டையர்கள் அல்லது மூன்று குழந்தைகள் வளர்வதை பார்ப்பது மற்றும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அற்புதமானது. வாழ்நாள் முழுவதும் இருக்க கூடிய விஷேச பந்தத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.
செய்ய வேண்டியவை:
உங்கள் மீது கவனம்
வங்கியாளரான காவ்யா யாதவ் மூன்றரை வயது இரட்டையர்களான கியான் மற்றும் ஆன்யாவின் தாய். இரட்டைக்குழந்தை பிறக்க இருப்பதை அறிந்தவுடன் தானும், கணவரும் முதலில் உற்சாகம் அடைந்தாலும் துவக்கத்தில் இருந்தே கடினமாக இருந்தது என்கிறார் அவர். “பிரசவத்தில் இருந்து இது துவங்கியது. இரட்டை குழந்தைகளை சீக்கரமே பிரசவம் பார்க்க வேண்டும். உங்கள் சுரப்பிகளும் உச்சத்தில் இருக்கும். இரட்டைக்குழந்தைகள் பிறந்தவுடன் தூக்கமே இருக்காது. ஆர்ம்ப காலத்தில், குறிப்பாக பால் கொடுப்பது சவாலாக இருக்கும். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்த பின் இன்னொரு குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்கிறார் அவர். உதவிக்கு அம்மா உடன் இருந்தாலும் குழந்தைகளை தானும் கணவரும் மட்டுமே கவனித்துக்கொண்டோம் என்கிறார் அவர் மேலும். “எனக்கு நான்கு மாத கால பேறுகால விடுமுறை இருந்தது. மேலும் இரண்டு மாதங்கள் சம்பள இழப்புடன் விடுமுறை எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு நாங்கள் இருவருமே வீட்டில் இருந்து பணியாற்றினோம். மூன்று மணி நேர் ஷிப்ட்களில் பணியாற்றினோம். 8 மாதங்கள் இவ்வாறு செய்ய பிறகு குழந்தைகள் காப்பகத்தில் விடலாம் என தீர்மானித்தோம்” என்கிறார் அவர். “ஒரு குழந்தைக்கு மேல் பாலூட்டி வளர்க்க வேண்டிய நிலைக்கு ஏற்ப அம்மா தன்னை உடல்ரீதியாக தயார் செய்து கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவில் பேறுகால விடுமுறை காலம் அதிகமாக்கப்பட்டுள்ளதால் இளம் அம்மாக்கள் தங்கள் குழந்தையும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அதிக நேரம் கிடைக்கிறது” என்கிறார் ஜிஜி மருத்துவமனையின் டாக்டர். பிரியா செல்வராஜ்.
செய்யக்கூடாதவை
குற்ற உணர்வு
புதிய பொறுப்புக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் போது ஒரு அம்மாவுக்கு மனநிலை மாற்றங்களும், உடல் ரீதியிலான சவால்களும் உண்டாகும். ஒரு குழந்தைக்கு மேல் இருக்கும் போது இது இன்னமும் சிக்கலாகும். குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான மற்றும் உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். முதல் சில மாதங்களில் பயிற்சி பெற நர்ஸ்கள் அல்லது ஆயாக்கள் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். நிதி விஷயங்கள், உதவி அமைப்புகள் மற்றும் பணி சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் ம் மூலம் இவற்றால் பின்னர் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம். குழந்தை பிறந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் தான் உண்மையில் சவாலானது. சில நேரங்களில் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் உருவாகலாம் என்பதால் இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளுக்கு அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் தான் குழந்தைகள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்வதோடு, சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, சுவையும் வளர்த்துக்கொள்கின்றனர். ஏதேனுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மன அழுத்தம் உண்டாகலாம். பல நேரங்களில் புதிய நோய்த்தொற்றுகள் தானாகவே சரியாகிவிடக்கூடும். ஆனால் நல்ல குழந்தை நல மருத்துவரை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்கிறார் டாக்டர்.பிரியா செல்வராஜ்.