இந்த ஜூஸை சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறுதானியம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கும்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய கம்பு – 1 கைப்பிடி
தேங்காய் துருவல் – 1 கைப்பிடி
ஏலக்காய் – 2
வெல்லம் – ஒரு துண்டு
செய்முறை
கம்பை இரவில் ஊற வைத்து மறுநாள் முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதோடு வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.
அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.
சுவையான கம்பு ஜூஸ் ரெடி.