வாட்ஸ் அப் செயலியை நாம் அதிகளவில் பயன்படுத்தினாலும் நமக்கு தெரியாத பல முக்கிய அம்சங்கள் அதில் இருக்கவே செய்கின்றன.
WhatsApp மெசேஜ் செய்யும்போது Fontஐ மாற்றலாம். இதற்கு மெசேஜ் டைப் செய்ய ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் ‘’’ என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும். இது ஆன்டிராய்டு ஃபோன்களில் மட்டுமே செயல்படும்.
இதேபோல் Font ஸ்டைலையும் மாற்றலாம். மெசேஜ் ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் * குறியீடு வைத்தால், Message Bold ஆக மாறும். மெசேஜ் ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் _ குறியீடு வைத்தால் Italic Font ஆக மாறும்.
WhatsApp குரூப்களில் நாம் பெறும் இமேஜ்கள், வீடியோக்கள் தானாக டவுன்லோடு ஆகி, ஃபோன் மெமரியை நிரப்பிவிடும். இதைத் தவிர்க்க, Settings – Chats – Save to Camera Rollஐ ஆஃப் செய்யவும்.
Cube ACR Appஐ பயன்படுத்தி WhatsApp Audio, Video callகளை Record செய்ய முடியும். Video call ஆக இருந்தால் Audio மட்டும் Record ஆகும். WhatsApp call மட்டுமின்றி அனைத்து call களையும் இது Record செய்யும். அதாவது All in one call Recording App.
ஃபோனில், வீடியோ அல்லது படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, WhatsApp Notification வரும். இது தொந்தரவாக இருப்பது ஒருபுறம் என்றால், 2-3 பேரோடு சேர்ந்து படம் பார்க்கும்போது, நமது ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரியக்கூடும்.
இதைத்தடுக்க, Settings – Accounts – Privacy – Enable Finger Print Lock – Show Content in Notification – Disable – செய்ய வேண்டும்.
உங்களது அனுமதியின்றி, நேரடியாக பழக்கம் இல்லாத பலர், அவர்கள் ஆரம்பிக்கும் குரூப்பில் இணைப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் ஃபோன் ஸ்டோரேஜ்க்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்க, Settings – Accounts – Privacy – Groupக்கு சென்று மூன்றாவதாக இருக்கும் My Contact Except என்ற Optionல் நீங்கள் டிக் செய்யும் நபர் மட்டுமே உங்களை குரூப்பில் இணைக்க முடியும்.