திமுக அவைத்தலைவரான மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்று அரசியலில் தனது இரண்டாவது ஆட்டத்தை சசிகலா தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
80 வயதான மதுசூதனன் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் செயற்பட்டு வருபவராவார்.
கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா வெற்றி வெற்று முதல்முறையாகத் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது, கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மோசமடைந்ததாக நேற்று தகவல் வெளியாகியுள்ளன.
இதையடுத்து மதுசூதனனிடம் நேரில் நலம் விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். அதே நேரத்தில் சசிகலாவும் அங்கு வர திடீரென மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரே சசிகலா உள்ளே சென்றார். குறிப்பாக அதிமுக கொடி கட்டிய காரில் சென்று மதுசூதனனிடம் நலம் விசாரித்தார். சசிகலா அதிமுகவிலேயே இல்லை என அதிமுக தலைவர்கள் தொடர்ந்து குறி வரும் நிலையில், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தச் சூழலில் தான் மதுசூதனனிடம் நேரில் நலம் விசாரிக்க, ஜெயலலிதா உயிரிழந்த அதே அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றிருக்கிறார் சசிகலா. இது நாள் வரை ஆடியோ அரசியல் மட்டுமே செய்து வந்த சசிகலா, முதல்முறையாக அதிமுக கொடி கட்டிய காரில் அரசியலில் தனது 2 ஆம் ஆட்டத்தை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தொடங்கியுள்ளார்.
அடுத்து வரும் வாரங்களில் அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் நிச்சயம் நடைபெறும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.