எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டிய விதம் சம்பந்தமாக பொது நிகழ்ச்சி நிரல் ஒன்றை உருவாக்குவதற்காக எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை அதிகளவான வாக்குகளால் தோல்வியடைந்தமையை அடுத்தே ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.