கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற ரிஷாட் பதியூதீன் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ரிசாத் பதியூதீன் கடந்த 17ம் திகதி திடீர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் குணமடைந்த நிலையில் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
இதேவேளை, பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தேசிய வைத்தியசாலையின் அறைக்கு தன்னை மாற்றுமாறு ரிஷாட் பதியூதீன் கோரியிருந்த போதிலும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அதனை நிராகரித்திருந்தனர்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.