கேரளாவில் பிரபல ஆர்ஜே-வான அனன்யா குமாரி அலெக்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கேரளாவை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ்(வயது 28), கொல்லம் மாவட்டம் பெருமண் பகுதியை சேர்ந்த அனன்யா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த போது உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவருடைய காதலரான ராஜ்(வயது 36), அவருடைய நண்பரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதலியின் பிரிவை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.