மகாபலிபுரம் அருகே நடந்த கார் விபத்தில் சிக்கிய பிக் பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் இவர் மகாபலிபுரம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா மாடலிங் துறையிலும் செயல்பட்டு வருபவர் ஆவார்.
நேற்றைய தினம் (24-07-2021) யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த் சென்று கொண்டிருந்த கார் கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் அருகே நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது.இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கொடூரமான கார் விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பது சினிமா துறையிலும் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.