ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி இரண்டு வரிசைகள் ஒதுக்கப்படும் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரு வரிசையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும், இன்னொரு வரிசையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடனையே அனுமதி அளிக்க உள்ளனர்.
ஆனால் எஞ்சியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்திற்கும் 8 நாட்கள் முன்னர் கொரோனா சோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழ்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
முழுமையாக தடுப்பூசி போடாதவர்களுக்கு ஜூலை 5 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க மக்களுக்கும் எஞ்சிய சர்வதேச மக்களுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.
இரண்டு வரிசையாக பிரிப்பதால், துரிதமாக செயல்பட முடியும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.