கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், நடிகர் விஜய்யின் ஆளுயர சிலை ஒன்றை பரிசளித்துள்ளனர்.தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர் நடிக்கும் படங்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், நடிகர் விஜய்யின் ஆளுயர சிலை ஒன்றை பரிசளித்துள்ளனர். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் அந்த சிலை வைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.