தனது மகளின் மரண பரிசோதனை முஸ்லிம் வைத்தியரொருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தனக்கு அதில் சந்தேகம் உள்ளதாக ஹிஷாலினியின் தாய் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீயில் எரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து அவரது பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிஷாலினியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், என்னுடைய மகளுக்கு நிறைய அநியாயங்கள் நடந்துள்ளன.