ஆணமடுவ பிரதேசத்தில், பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட தாதியை பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கடுமையான வலி ஏற்பட்டதாகத் தெரிவித்து, ஆத்திரமுற்ற பௌத்த பிக்கு குறித்த தாதியை கண்ணாடி தட்டினால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தாதியின் தலையில் பலத்த காயமம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆணமடுவ ஆதார வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வரும் தாதியொருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
ஆணமடுவ குமாரகம விஹாரையைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு தாதியை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தாதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மருத்துவர் பத்மினி அபேரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தாதி மேலதிக சிகிச்சைக்கா குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.