பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி 9 நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்துவதாக இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
தடை செய்யப்பட்ட வகையான பிரமிட் திட்டமொன்றினை நேரடியாக அல்லது நேரடியற்று தொடங்குகின்ற, வழங்குகின்ற, ஊக்குவிக்கின்ற, விளம்பரப்படுத்துகின்ற, கொண்டு நடத்துகின்ற, நிதியளிக்கின்ற முகாமைத்துவம் செய்கின்ற அல்லது பணிக்கின்ற எவரேனும் ஆள் தண்டனைக்குரிய தவறொன்றிற்கான குற்றவாளியாதல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.