தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் இலங்கை தொழிலாளி ஒருவர், தொழில்துறை விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது தொடர்ந்து 18 மணி நேரம் வேலை செய்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கொரியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 33 அகவையைக்கொண்ட இந்த தொழிலாளி ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில், எரிபொருள் இயந்திரம் ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விபத்துக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உற்பத்தியில் குறைபாடு காரணமாக, தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்தின் போது தொழிலாளர் சட்டங்களில் மீறல்கள் இருந்தனவா என்பதை தென்கொரியா காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.