தென்னிலங்கையில் கோவிட் தடுப்பூசி இரண்டும் பெற்ற நான்கு பிள்ளைகளின் தந்தை கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஹங்கம, குருல்லவல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் மே மாதம் 29ஆம் திகதி முதலாவது சைனோபாம் தடுப்பூசி போட்ட நிலையில் ஜுன் மாதம் 28ஆம் திகதி இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி அவர் சளி பிரச்சினை காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளர். உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமையினால் நிமோனியா நிலைக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.