யாழ்.தீவகம் வேலணை பகுதியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வேலணையைச் சேர்ந்த 126 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் நேற்று முன்தினம் வேலணை பகுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.