இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து டுபாய் வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் 7ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அச்சுறுத்தல் மற்றும் டெல்டா மாறுபாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கோல்டன் விசா, முதலீட்டு விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ பணியாளர்கள், எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்பவர்கள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.