மதுரை அரசு மருத்துமவனையில் இறந்து கிடந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் ரூ56 லட்சம் பணம் இருந்த விஷயம் தற்போது வெளியே வந்துள்ளது.
மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவர் அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.
அவரது உடலை மீட்ட போலீசார் இவர் குறித்து விசாரணை நடத்தியதில் இவர் பெயர் பூல்பாண்டியன் எனவும், இவர் மதுரையில் பல்வேறு பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருவது தெரியவந்தது.
மேலும் இவர் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுண் போடப்பட்டிருந்த போது மதுரை மாவட்ட கலெக்டரிடம் ரூ3 லட்சம் கொரோனா நிவாரண தொகையாக வழங்கியவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் பின் போலீசார் அவரது உடமைகளை பரிசோதத்து பாரத்த போது அவர் பையில் வங்கியின் பாஸ்புக் இருந்துள்ளது அதை சோதித்து பார்த்த போது அவர் வங்கி கணக்கிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ36 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
அது போக வங்கி கணக்கி்ல ரூ20 லட்சம் பணம் இருந்துள்ளது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இவர் ஏன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவரிடம் எப்படி ரூ50 லட்சத்திற்கும் அதிகமான பணம் வந்தது உள்ளிட்ட பல விஷயங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.