எகிப்து நாட்டில் ஒரு பெண் அவரின் கணவருக்கும், குழந்தைகள் மூவருக்கும் ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
எகிப்து நாட்டில் உள்ள Qena என்ற பகுதியைச்சேர்ந்த 26 வயதுடைய ஒரு பெண், திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், வேறு ஒரு ஆணுடன் தவறான பழக்கம் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், தன் காதலுக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் அவர்களை கொலை செய்ய தீர்மானித்துள்ளார்.
அதன் படி, அவரின் காதலன் விஷம் கலந்த ஜூஸை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். அவர் அதனை தன் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்திருக்கிறார். அதை குடித்த சிறிது நேரத்தில் குழந்தைகள் மூவரும் பரிதாபமாக இறந்துள்ளனர்.
எனினும் அவரின் கணவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பில், தகவலறிந்த காவல்துறையினர், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது காலாவதியான ஜூஸை பருகியதால் குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
எனினும் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கணவருக்கும் குழந்தைகளுக்கும் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.