யாழ்., வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 18 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த முடிவு வெளியாகியுள்ளது.
கரவெட்டி சுகாதா ர வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 66 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் 45 பேருக்குத் தொற்று இல்லை எனவும், 18 பேருக்குத் தொற்று எனவும், 3 பேருக்கு மீள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.