கோவிட் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியின் மூன்றாவது டோஸையும் கொடுக்க தயாராக இருப்பதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அவர்களின் அடையாளத்தை எளிதாக்க சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.