கம்பஹா மாவட்டத்தின் யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று காலை மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவரை கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.